எரிபொருள் விலைகள் நள்ளிரவு முதல் உயர்வு

பெட்ரோல், டீசல் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளன.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ), லங்கா ஐஓசி நிறுவனம் ஆகியன எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாய், சூப்பர் டீசல் விலை 50 ரூபாய், ஒக்டேன் 92 பெட்ரோல் விலை 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எனினும், ஒக்டேன் 95 பெட்ரோல்,மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.