இந்தியாவில் தலைமைத்துவப் பயிற்சி: ஜேவிபி குழு பங்கேற்பு

புதுமையான தலைமைத்துவம் தொடர்பான சர்வதேச பயிற்சியில் மக்கள் விடுதலை முன்னணியின் குழு பங்கேற்பு

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, “நிறுவன வளர்ச்சி மற்றும் சிறப்புக்கான புதுமையான தலைமைத்துவம்” தொடர்பான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து சென்ற மக்கள் விடுதலை முன்னணியின் சிறப்புக் குழுவினர், தமது பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டக்குழு உறுப்பினர் கணேசன் திலிப்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த செப்டம்பர் 20ஆம் திகதி இந்தியாவின் நொய்டாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அங்கு நடைபெற்ற சர்வதேச பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள், கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி தமது பயிற்சிகளை நிறைவு செய்து இலங்கை திரும்பினர்.

இந்தக் குழுவில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த,கலைச்செல்வி, ஹாதி, தமிழ்வாணி, தோழர் சச்சின் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.