ஓடுபாதையில் விமானத்தை துரத்திய பெண் பயணிகள் ரஷ்ய விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர்.
விமானத்தைத் தவறவிட்ட பெண் பயணிகள் இருவர், ஓடும் விமானத்தைத் துரத்திய சம்பவம் மொஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தங்கள் பயணத்தை மாற்றியமைப்பதற்குப் பதிலாக, ஓடுபாதையில் பயணத்தைத் தொடங்கிய விமானத்தைத் துரத்திப் பிடிக்க முயற்சித்த இந்தப் பெண்களால் பெரும் பாதுகாப்பு பிரச்சினை உருவானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பயணிகள் மூன்று மணித்தியாலத்திற்கு முன்னதாக வரவேண்டும் என்ற அறிவிப்பை உதாசீனம் செய்வோருக்கு ஒரு படிப்பினைதான், என்றாலும் ஓடுபாதை வரை பயணப் பெட்டிகளுடன் இவர்கள் எப்படி சென்றார்கள் என்று தெரியவில்லை!
