மட்டக்களப்பில் வடிகான்கள் தூய்மைப்படுத்தும் பணி

மட்டக்களப்பில் வடிகான்கள் தூய்மைப்படுத்தும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஒற்றுமையாக ஒன்றிணைவோம் நாட்டைக் கட்டி எழுப்புவோம் என்னும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட பிரதான நிகழ்ச்சி இன்று (08.08.2026) காலை 8 மணி அளவில் வெட்டுக்காடு பொதுச் சுகாதாரப் பிரிவில் மட்டு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.

இப்பகுதியில் கடந்த பல வருடங்களாக துப்புரவு செய்யப்படாத வடிகான்கள் தூய்மைப்படுத்தும் செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தத் தேசிய நிகழ்ச்சி திட்ட ஆரம்ப நிகழ்விற்கு மட்டு மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர், மாநகர சபையின் உறுப்பினர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

கடந்த காலங்களில் இப்பகுதியில் வெள்ள அனர்த்தங்களின் போது இந்த வடிகான்கள் தூய்மைப் படுத்தப்படாமல் காணப்பட்டதால், இந்தப் பொதுச் சுகாதாரப் பகுதியில் டெங்கு குடம்பிகள் பரவுவதற்கான காரணமாக இருந்தது.

தற்போது இந்தத் தேசிய தூய்மை தின நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இப்பகுதி பூரணமாக தூய்மைப்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எஸ்.வரதராஜன், மட்டக்களப்பு