காவலர்களைக் கட்டிவைத்து வங்கிப் பெட்டகம் சூறை!

மொரகஹஹேனை, கோரலைமை பகுதியில் கொள்ளைர்கள் மூவர் அங்குள்ள கிராமிய வங்கி ஒன்றின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அதிலிருந்த பெருமளவிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று (23) அதிகாலை 1.00 மணியளவில் வங்கி வளாகத்திற்குள் நுழைந்துள்ள இக்குழுவினர், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கட்டிவைத்துவிட்டு, வங்கியின் பின்புறம் உள்ள குளியலறையின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து இந்தக் கைங்கரியத்தைச் செய்துள்ளனர்.

பின்னர், அவர்கள் அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அதற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைத் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.