விடுதியில் தங்கியிருந்த குழந்தைகள் இரண்டு தீ விபத்தில் மரணம்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தாயைப் பார்ப்பதற்காக வந்து தங்கியிருந்தவேளையில் தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் இரண்டு உயிரிழந்த சம்பவம் இன்று மே 27 மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் உள்ள ஒரு விடுதியில் இடம்பெற்றுள்ளது.

சந்தனி நிமாஷா (05), கசுன் மதுசங்கா (03) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரழந்தனர். இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

இவர்களை அழைத்து வந்த அவர்களின் தந்தை அறையைப் பூட்டிவிட்டு வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்தபோது குழந்தைகள் இரண்டும் தீப்புகையைச் சுவாசித்ததால் மயக்கமுற்றுக் கிடந்துள்ளன.

உடனடியாக அவர்களை மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும் அங்கு அவர்கள் உயிரிழந்துவிட்டனர்.

விடுதியின் உணவருந்தும் அறையிலேயே தீ விபத்து ஏற்பட்டு அஃது அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குழந்தைகள் இரண்டும் தீப்புகையைச் சுவாசித்ததால் மரணமடைந்ததாகத் தெரியவருகிறது.

சம்பவம் குறித்து மட்டக்களப்பு பபபொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ். வரதராஜன்