தலங்கமை பொலிஸாரினால் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சா, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றிக் கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (25) தலங்கமை பொலிஸ் நிலையத்தில் அவர் ஆஜரானார்.
