தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பிக்க தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அண்மைக் காலமாக அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு வகைகளின் தரம், சுவை திருப்தியாக இல்லை என முறைப்பாடுகள் எழுந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பிலான அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
உணவக மறுசீரமைப்பிற்கும். பொருள்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள், நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார்.
