தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து முதல் சட்டசபை கூட்டத்தொடர் கூடியது. தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17ஆவது சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கின்றார்.
தொடர்ந்து, சென்னை வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதவியேற்றார்.
சென்னை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அமைச்சர் ராஜ்மோகன் பதவியேற்றார்.
தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார்.
தமிழக அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார்.
சான்றிதழ் கொண்டு வராததன் காரணமாக அமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் நாளை(12) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (13) நம்பிக்கை வாக்கெடுபபு நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 இடங்களில் வென்ற தவெக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.
சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 10ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், நேற்று(10) தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய், அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
மேலும், எம்எல்ஏவாக பதவியேற்க வந்தவர்களில் இருவர் வெற்றிச் சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் பதவியேற்க முடியவில்லை. அமைச்சர் கீர்த்தனா, கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் வெற்றிச் சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் பதவியேற்க முடியவில்லை.
