மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொகமது மொய்சு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையில் இன்று (மே 04) இருதரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மாலைதீவுக்கும் இலங்கைக்குமிடையில் சுற்றுலா, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, இளைஞர் மேம்பாடு ஆகிய துறைகளில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
