எரிபொருள் விலை நள்ளிரவு முதல் மீண்டும் உயர்கிறது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு 12.00 மணி முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்கின்றது.

லங்கா ஓட்டோ டீசல் 10.00 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 392.00 ரூபாய் ஆகும்.

லங்கா சூப்பர் டீசல் 15.00 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 458.00 ஆகும்.

மண்ணெண்ணெய் 10.00 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 265.00 ஆகும்.

பெற்றோல் 95 ஒக்டேன் 15.00 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 470.00 ஆகும்.

பெற்றோல் 92 ஒக்டேன் 12.00 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 410.00 ஆகும்.