அமெரிக்காவில் வெள்ளை மாளிகை இராப்போசனத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆசிரியர் ஒருவர் என்று தெரியவந்துள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த அவர் கோல் டொமாஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு நடந்த அந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
ஆலனிடம் இரண்டு துப்பாக்கியும் சில கத்திகளும் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் தனித்தே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்.
எனினும், அவரின் உள் நோக்கம் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது அதிபர் டிரம்ப்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. திரு. டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் இது மூன்றாவது சம்பவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
