பலாங்கொடை - ஹற்றன் வீதியில் பள்ளத்தில் கார் வீழ்ந்து ஒருவர் பலி

பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (17) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காரின் சாரதியும் பெண்கள் இருவருமாக மூவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்