உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இன்று ‘பராபவ’ தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.புத்தாண்டு சுப நேரங்கள்,ஆசார முறைகள் குறித்த விபரங்கள் பஞ்சாங்கங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.
புத்தாண்டு பிறப்பு
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி: இன்று காலை 08:40 க்கு புத்தாண்டு பிறக்கிறது.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி: இன்று காலை 09:32 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.
மருத்து நீர், நீராடல்
புத்தாண்டு தினமான இன்று அதிகாலை 04:40 முதல் நண்பகல் 12:40 வரை மருத்து நீர் வைத்து நீராடுவதற்கு (ஸ்நானம் செய்ய) மிகவும் உகந்த நேரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புண்ணிய காலம்
புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரான,பின்னரான நடுநிலை நேரமான புண்ணிய காலம்:
நேற்று இரவு 08:57 இற்குத் தொடங்கி, இன்று காலை 09:45 வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் ஆலய தரிசனம், தான தர்மங்களில் ஈடுபடுவது சிறப்பு.
கைவிசேடம், ஆடை
இன்று காலை 08:47 முதல் 09:04 வரையிலான காலப்பகுதி கைவிசேடம் பரிமாறிக் கொள்வதற்கு உகந்த நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தாண்டுக்கான மங்கலகரமான ஆடையாக சிவப்பு,வெள்ளை நிறங்கள் கலந்த ஆடையை அணிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
