பணியிடத்தில் ஆண்ரி என்று அழைக்க முடியாது!

தாதி ஒருவரை ஆண்ட்டி என்று அழைத்த சகபாடி ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மான நட்ட வழக்கில் அவருக்குச் சுமார் ஆறு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டன் அரச சுகாதாரத் துறையில் பணியாற்றும் இந்திய வம்சாவளி செவிலியர் ஒருவருக்கே இந்த நிவாரணம் கிடைத்துள்ளது.

தன்னுடன் பணியாற்றும் கானா நாட்டைச் சேர்ந்த சக செவிலியர், பலமுறை தன்னை இனத்தைச் சுட்டிக்காட்டி ஆண்ட்டி என்று அழைத்ததாகவும் அவ்வாறு அழைக்க வேண்டாம் எனச் சொல்லியும் மீண்டும் மீண்டும் அவ்வாறு அழைத்து மனத்தைப் புண்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கின்றார்.

இதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மான நட்ட வழக்கில், பணியிடத்தில் ஆண்ட்டி என்று அழைப்பது ஏற்புடையது அல்ல என்பதை ஏற்றுக்கொண்ட பிரிட்டன் நீதிமன்றம் அவருக்கு 1,425 பௌண்ட்ஸ் (இலங்கை மதிப்பில் ரூபாய் சுமார் ஆறு இலட்சம்) அபராதம் செலுத்துமாறு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கானா பெண், மேன்முழறையீடு செய்திருந்தார். அந்த மேன்முறையீட்டிலும் பிரிட்டன் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நன்றி – டெக்கான்ஹெரல்ட் (படம்:ஏஐ)