அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், நிறைந்த பண்டிகையாக அமையட்டும்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் விவசாயிகளுக்கும் பாரிய நிவாரணங்களை வழங்கும் வகையில் அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டத்திலும் உர மானியத்திலும்ல் விசேட அதிகரிப்பு களை சித்திரைப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, மேற்கொண் டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று நாடாளு மன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், இன்று (07) விசேட சலுகையை அறிவித்த ஜனாதிபதி:

ஏப்ரல் மாதத்திற்காக மட்டும் அஸ்வெசும பயனாளர்களின் உதவித்தொகை பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளது:

இதுவரை 17,500 ரூபாயாக இருந்த உதவித்தொகை 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

10,000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான உர மானிய அதிகரிப்பு:

சிறுபோகப் பயிர்ச்செய்கை மற்றும் ஏனைய பயிர்களுக்கான உர மானியங்களிலும் பின்வரும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

சிறுபோகப் பயிர்ச்செய்கை: ஒரு ஹெக்டேருக்கான உர மானியம் 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பயிர்கள்: ஹெக்டேருக்கு இதுவரை வழங்கப்பட்ட 15,000 ரூபாய் மானியம், இனி 18,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

தேயிலைச் செய்கை: தேயிலை பயிர்ச்செய்கைக்கு வழங்கப்படும் உரச் சலுகை 9,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த உடனடி நிவாரணங்கள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.