பஹ்ரைனின் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை மீது தாக்குதல்

பஹ்ரைனின் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை மீது நேற்று (28) ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் தொழிற்சாலையின் ஊழியர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த தாக்குதலில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து நிறுவனம் தற்போது கணக்கிட்டு வருவதுடன், ஊழியர்களின் பாதுகாப்பே தங்களது முதன்மையான பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.

ஈரானின் இரண்டு எஃகுத் தொழிற்சாலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அலுமினியத் தொழிற்சாலைகளை இலக்கு வைத்ததாக ஈரானிய புரட்சிகர இராணுவம் தெரிவித்துள்ளது.