போர் நிறுத்தம் செய்வதற்கு அமெரிக்கா முன்வைத்துள்ள 15 நிபந்தனைகளை ஈரான் நிராகரித்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஈரான் முடிவெடுத்தால் மட்டுமே யுத்தத்தை நிறுத்த முடியும் என்றும் அது தனது இலக்கை அடைவதில் உறுதியாக உள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தை மத்தியஸ்தர்கள் மூலம் ஈரான் பெற்றதாகவும், எனினும் பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் அழைப்பை ஈரான் நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் உதவியுடன் மத்தியஸ்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அசோசியேட் பிரஸ் செய்தி ஒன்று, போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தை பாகிஸ்தான், ஈரானிடம் கொண்டு சேர்த்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த இராஜதந்திர முயற்சிகளை ஈரான் ராணுவம் கிண்டல் செய்துள்ளது. ‘உங்கள் உள் மோதல்கள் உங்களுக்குள்ளேயே நீங்கள் பேரம் பேசும் நிலையை எட்டியுள்ளதா?’ என்று ஈரான் இராணுவம் மற்றும் துணை இராணுவப் புரட்சிகரக் காவலர் படை ஆகிய இரண்டுக்குமான மத்திய தலைமையகம் கேலி செய்துள்ளது.
