நடிகர் அஜித்குமாருக்கு மஹிந்திரா நிறுவனம் தனது புது மாடல் ‘மஹிந்திரா பிஇ 6 ஃபார்முலா எடிசன்’ காரைப் பரிசாக வழங்கியுள்ளது.
இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் கார்களான XUV 3XO EV, BE 6, XEV 9e, XEV 9s ஆகிய மாடல்கள் மூலம் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்குமாருக்கு மஹிந்திரா நிறுவனம் தனது புது மாடல் ‘மஹிந்திரா பிஇ 6 ஃபார்முலா எடிசன்’ காரைப் பரிசாக வழங்கியுள்ளது.
இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் கார்களான XUV 3XO EV, BE 6, XEV 9e, XEV 9s ஆகிய மாடல்கள் மூலம் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் ஃபார்முலா இ உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதைத் தொடர்ந்து புதிதாக BE 6 சிறப்பு எடிசன் ஃபார்முலா இ SUV மின்சாரத் திறன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார் அதிவேகத் திறன்கொண்ட பல வகையான கார்களை சொந்தமாக வைத்துள்ள நிலையில் இந்த புதிய மின்சார காரை மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் ஆர்.வேலுசாமி நடிகர் அஜித்குமாருக்கு பரிசாக வழங்கியுள்ளார்..
உலகின் முதல் ஃபார்முலா தீம் கொண்ட மின்சார SUV கார் இதுவாகும். இந்த கார் FE2, பேக் FE3 என்ற இரு வகைமைகளில் வெளியாகியுள்ளது. 79 kWh பேட்டரி திறன் கொண்ட இந்த கார் அதிகபட்சமாக 202 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எவரஸ்ட் ஒயிட், டாங்கோ ரெட், ஸ்டீல்த் பிளாக், ஃபயர்ஸ்ட்ராம் ஆரஞ்சு ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்து கார் பந்தயங்களில் முழுநேரமாக ஈடுபட்டு வருகிறார். தனக்கென ’அஜித்குமார் ரேஸிங்’ என்ற கார் பந்தய அணியையும் அஜித்குமார் சொந்தமாக வைத்துள்ளார்.
துபாயில் கார் பந்தயங்களில் கலந்துகொண்ட அவர் தற்போது அடுத்தப் படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் சில நாள்களுக்குமுன் தமிழ்நாடு வந்திருந்தார்.
