ஜனநாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிம ஒப்பந்தத்தை பிரபல ஓடிடி நிறுவனம் இரத்து செய்யவுள்ளதாக அறியப்படுகிறது.
படத்தின் ஓடிடி உரிமைத் தொகையை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படும் அமேசான் ஃப்ரைம் நிறுவனம், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் விநியோகஸ்தர்களும் தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன், வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகின்றது.
உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் எனப் படத்தின் சான்றிதழுக்காக அலைந்த படக்குழு, இறுதியில் வழக்கை திரும்பப்பெற்று மறுதணிக்கைக்குப் படத்தை அனுப்பிவைத்தது.
தற்போது மறுதணிக்கை குழுவினர் படத்தைப் பார்த்து சான்று அளிக்காமல் தாமதப்படுத்தி வரும் சூழலில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
