T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி: கிண்ணத்தை வென்றது இந்தியா!

T20 உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்களால் தோற்கடித்து கோப்பையை வென்றது இந்திய அணி.

இந்தியாவின் அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 05 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது.

256 வெற்றி ஓட்ட இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரடமே பெற்றுத் தோல்வியடைந்தது.

இந்திய அணி இதற்கு முன்னர் இரண்டு தடவை ரி20 உவகக் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.