எதிர்க் கட்சிகள் விமர்சித்தாலும் உலக நாடுகள் உதவி வருகின்றன - பிரபு

எதிர்க் கட்சிகள் விமர்சித்தாலும் உலக நாடுகள் உதவி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினரால் பல குற்றச்சாட்டுகள் எமது அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட போதிலும் இன்று பல சர்வதேச நாடுகள் எமக்கு பாரிய உதவிகளை செய்து வருகின்றன அவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் நாம் அதிலிருந்து மீண்டெழும் சக்தியை கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

எமது அரசாங்கம் சேதமடைந்த அத்தியாவசிய சேவைகளை துரிதமாக கட்டி எழுப்பி வருகின்றோம் நமது மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது

எமது ஜனாதிபதி இரவு பகல் பாராமல் பாதிக்கப்பட்ட இடங்களை சென்று நேரடியாக பார்வையிட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதை விட்டு இன்று எதிர்க்கட்சியினர் பாராட்டும் அளவுக்கு நமது சேவைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற விட்டுத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண வீடமைப்பதிகார சபையினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 107 பேருக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாகாண கட்டிடத் திணைக்கள வீடமைப்பு அலுவலகத்தில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் எஸ் ஜான்சன் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார்

104 பயனாளிகளுக்கு 1லட்சம் ரூபாய் வீதமும் ஏனைய பயனாளிகளுக்கு கட்டம் கட்டமான நிதி உதவிகளும் இங்கு வழங்கி வைக்கப்பட்டன.

இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு மாகாண கட்டிடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கிழக்கு மாகாண வீமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு வரதன்