இரத்தன தேரரைக் கைதுசெய்ய பிடியாணை

இரத்தன தேரரைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சங்கைக்குரிய அதுரலியே இரத்தன தேரரைக் கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்டு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ வுட்லர் தெரிவித்தார்.