தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி விபத்து ஏற்பட்டுத் தீப்பிடித்துக்கொண்டது.
தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி ஒன்றே தடுப்பு வேலிகளில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
குருந்துகஹஹெத்கம பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்து லொறி தீப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மூவர் காயமடைந்து எல்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
