ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தடை விதிக்கும் டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதனால், வெளிநாட்டு மாணவர்களும் பல்கலைக் கழக நிர்வாகமும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஹார்வர்ட்டைச் சேர்ந்த இரண்டாவது ஆண்டு வெளிநாட்டு மாணவரான ஆல்ஃபிரட் வில்லியம்சன், எப்படியேனும் தம் பல்கலைக்கழகத்தின் கை ஓங்க வேண்டும் என்றும் அடுத்த பள்ளித் தவணைக்குத் தாம் திரும்ப வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
ஹார்வர்ட் தனது அனைத்துலக மாணவர்களுக்கு நிதியாதரவு அளிப்பதைத் தடுக்க திரு டிரம்ப் விதித்த உத்தரவை அமெரிக்க நீதிபதி ஒருவர் அண்மையில் நீக்கினார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டினர் படிப்பதற்கு அடுத்த ஆறு மாதங்களுக்குத் தடை செய்ய முற்பட்ட திரு டிரம்ப்பின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிதத நீதிமன்றம் விசாரணையை ஜூன் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதற்கு முன்னதாக அமெரிக்க அரசாங்கம் ஏற்கெனவே அந்தப் பல்கலைக்கழகத்திடமிருந்து 3.2 பில்லியன் டாலர் மானியங்களை நீக்கியுள்ளது.
அந்தப் பல்கலைக்கழகத்திற்கு நிதித் தடை செய்ய முயன்ற அரசாங்கம், அதன் வரிவிலக்கு நிலையையும் ரத்து செய்யக்கூடும் என்றும் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

